Tuesday, July 17, 2018

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக மத்திரமின்றி, பொது வேட்பாளராகவும் போட்டியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷமன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

இதனால், சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் உண்மையான நிலை என்ன என்பது தொடர்பில் குழப்பமான நிலை நீடிக்கின்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer