கூட்டு எதிரணி (மஹிந்த அணி) என அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவுக்கு எதிர்க்கட்சிப் பதவியையோ, எதிர்க்கட்சித் தலைவர் பதவியையோ கோரும் உரிமை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “தினேஸ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இயங்கும் ஒரு குழுவினர் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையில் போட்டியிட்டு தெரிவானவர்களே. அவர்கள் தற்போது முன்னாள் ஜனாதிபதிக்கு தரகர்களாக செயற்படுகின்றார்கள். இருப்பினும் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பானவர்களே. அக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தே ஆட்சியை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவும் முடியாது, அதை கோரும் உரிமையும் அவர்களுக்கு இல்லை.” என்றுள்ளார்.

0 comments :
Post a Comment