இலங்கையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“நாட்டினை முன்னேற்றமான பாதையில் இட்டுச் செல்வதா? அல்லது மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதா? என்பதே இன்றுள்ள கேள்வியாகும். நாட்டினை முன்னேற் றமான ஒரு பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமேயானால் ஒரு புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவது தவிர்க்க முடியாதது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்துள்ள பெல்ஜியத்தின் பாராளுமன்றக்குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்ட விடயங்களைக் எடுத்துக் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment