நாட்டில் இடம்பெறும் குற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்டனையை நிறைவேற்றுவது அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
“நாட்டில் நாம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மரண தண்டனையை நிறைவேற்றாமல் இருந்தற்கு காரணம், எமக்கு ஜி.எஸ்.பி சலுகை கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தில் அல்ல. மனிதாபிமானம் கொண்ட நாடாக நாம் இருந்ததனாலேயே.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜயம்பதி விக்ரமரத்ன இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “குற்றங்களைத் தடுப்பதற்கான உச்ச கட்ட வழிமுறை தூக்குத் தண்டனை வழங்குவது என்பதல்ல. குற்றங்களைக் கட்டுப்படுத்த முதலில் சட்ட நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதில் காணப்படும் ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம் சரியாக செயற்பட்டால், சரியான தண்டனை கிடைத்தால், பொலிஸ் பாதுகாப்பு படைகளின் கடமை சரியாக செயற்படும் என்றால் மரண தண்டனை அவசியம் இல்லை. அரசாங்கமாக நாம் அதனையே கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 comments :
Post a Comment