வடக்கு மாகாணத்தின் பிரதான விமான நிலையமான பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கு, இலங்கை - இந்திய பிரதானிகளிடையே இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இருநாட்டு உயர்மட்டச் சந்திப்புத் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்தோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்றே, நேற்று இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்புத் தொடர்பில் தொடர்ந்து கூறிய எம்.ஏ.சுமந்திரன், “பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது. அதற்கிணங்க, இந்தியாவினுடைய நிபுணர் குழுவொன்று, உடனடியாக பலாலி விமான நிலையம் தொடர்பில் ஆராய்வதற்கு வரவுள்ளது. அந்த நிபுணர்குழுவுடன் இலங்கைச் சிவில் விமான சேவை தொழில்நுட்பவியலாளர்களும் இணைந்து பணியாற்றுவார்கள்.
பலாலி விமான நிலையத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பிலேயே, முழுமையான விஸ்தரிப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன. விஸ்தரிப்புப் பணிகளுக்கு முன்பாக, இவ்வருட இறுதிக்குள் இந்தியாவிலிருந்து முதலாவது சர்வதேச விமானத்தை, பலாலியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. சர்வதேச விமானத்தின் வருகையை உறுதிப்படுத்துவதற்கான தொலைத்தொடர்புச் சாதனங்களை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான பணிகள் யாவும் மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளன.
இந்திய விமானச் சேவையை, உடனடியாக ஆரம்பிப்பதே திட்டமென்றும், இது, இவ்வருட இறுதிக்குள் சாத்தியமாகும். விமானப் போக்குவரத்து நடைபெறும்போதே, பலாலி விமான நிலைய ஓடுபாதைகள் மற்றும் விஸ்தரிப்புப் பணிகள் இடம்பெறும். இந்த விமான நிலைய விஸ்தரிப்பினூடாக, பலருக்கான தொழில்வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும்.
பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதன் அவசியம் பற்றி, இந்திய அரசாங்கம் அடிக்கடி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து வந்திருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக, இதற்கான நகர்வுகளை மும்முரமாக மேற்கொண்டு வந்தனர். திருச்சி, சென்னை விமான நிலையங்களிலிருந்து, முதற்கட்டமாக, பலாலிக்கான விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.” என்றுள்ளார்.

0 comments :
Post a Comment