சிறுவர் அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
'உத்தியோகபூர்வப் பணி' ஜனாதிபதி மக்கள் சேவை - தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8வது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை 02 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அவ்விழாவில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், “தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகவேண்டும்” எனக் கூறியிருந்தார். அந்த உரை தொடர்பில், பாரியளவில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் தன்னுடைய இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சி.வி.விக்னேஸ்வரனிடமும், விஜயகலாவின் உரை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment