தமிழக அரசியலில் தற்போது மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதால் கமல், ரஜினி என ஆளாளுக்கு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து வருகின்றனர்.
இவர்களை தொடர்ந்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பிக் பாஸ் ஜூலியும் அரசியல் கட்சி தொடங்க போவதாக தகவல்கள் வைரலானது.
ஆர்.ஜே.பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் கட்சியின் கோடியை பதிவேற்றினார், இதனை ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர், சிலர் ஆதரவும் கொடுத்தனர்.
அதேபோல் பிக் பாஸ் ஜூலியும் அரசியலுக்கு வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட இது என்னடா கால கொடுமை என ஜூலியை கலாய்த்தனர்.
தற்போது இது குறித்த உண்மை தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆர்.ஜே பாலாஜி ஹம்பிள் பொலிடீஷியன் நொக்ராஜ் என்ற கன்னட படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம். அதே போல் ஜூலியும் அரசியல் சார்ந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.
அதுக்கு தான் இந்த விளம்பரம் என தெரிய வந்துள்ளது, ஒரு படத்துக்காக எப்படியெல்லாம் விளம்பரம் செய்யறீங்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tuesday, May 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment