கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த ஆதரவே காணரம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாரதிய ஜனதா முன்னிலை பெற்றிருக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கிறது.
இதுகுறித்து பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “கர்நாடகத்தில் பாஜக பெற்ற வெற்றி மோடிக்கு கிடைத்த ஆதரவு என்று தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் நல்ல தீர்வு வரும் என்று கூறினார். கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றதற்கு நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா வுக்கு ஓ.பி.எஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tuesday, May 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment