Tuesday, May 15, 2018

கோடிகளில் சம்பளம் கொடுத்து சாய் பல்லவியை தமிழுக்கு கொண்டு வந்தார்கள்.

படத்தின் பெயர் ‘கரு’. ஏதாவது பிரயோஜனம் இருந்ததா?

பத்து பைசாவுக்கு ஆகவில்லை சாய்பல்லவியின் மவுசு.

தியேட்டர்கள் காற்றாடின. லைக்கா என்ற பெரும் நிறுவனம் வெளியிட்ட படமல்லவா?

விளம்பரங்களிலாவது மிரட்டுவார்கள் என்று நினைத்தால், அரை இட்லியை புட்டு வைத்து ஆகாத சட்னியை ஊற்றியிருக்கிறார்கள்.

இதனால் விளம்பர நிறுவனங்களும் ‘அட ச்சே’வாகிக் கிடக்கின்றன.

எத்தனை தோல்விகள் வந்தாலும், இமயவரம்பன் போல எழுந்து நிற்கும் ஏ.எல்.விஜய், தோல்வி சூடு ஆறுவதற்குள் அடுத்த படத்தை துவங்கிவிட்டார். மச்சம்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer