பெரும் புரட்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா.
இனி நேரடியாக தியேட்டர்களில் படம் வெளியிட்டு, நாமக்கட்டியை குழைத்து நெற்றியில் போட்டுக் கொள்வதை விட, நெட்பிளிக்ஸ் மாதிரியான இணையதளங்களில் வெளியிடுவது நிம்மதி என்று நினைத்துவிட்டார்கள்.
முதல் கட்டமாக ‘சில சமயங்களில்’ என்ற படம் நேரடியாக அதில் வெளியாகிறது. வாங்கும்போதே நல்ல விலையை தருகிறார்கள் என்பது மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதே நெட்பிளிக்ஸ் தனக்கான தியேட்டர்களை நாடெங்கிலும் கொண்டுவரவும் போகிறதாம்.
இணையதளத்தில் வெளியாகிற அதே நாளில் இவர்களே தியேட்டர்களிலும் வெளியிடுவார்கள். சினிமாவை வாழ வைக்க வந்த நெட்பிளிக்ஸ், தன் பெயரை ‘குட் பிளிக்ஸ்’ என்றல்லவா மாற்ற வேண்டும்?
Friday, May 11, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment