மியான்மாரில் இருந்து இனவழிப்புக் காரணமாக வங்க தேசத்துக்கு இடம் பெயர்ந்துள்ள இலட்சக் கணக்கான மக்களை உரிய முறையில் மீளப் பெற மியான்மார் அரசு தாமதமாக்கி வருவதால் இந்த அகதிகளின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள வங்கதேச அரசு திண்டாடி வருகின்றது.
கடந்த ஆக்டோபர் மாதமே தமது நாட்டில் தங்கியுள்ள றோஹிங்கியா மக்களுக்கு உதவ உலக வங்கியிடம் 500 மில்லியன் டாலர் நிதியுதவியை வங்கதேசம் கோரியிருந்தது.
ஆனால் அச்சமயம் இந்த வேண்டுகோளை உலக வங்கி நிராகரித்தது. ஆனால் தற்போது மனம் மாறியுள்ள உலக வங்கி வங்கதேசத்திலுள்ள றோஹிங்கியா மக்களின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளதாக வங்கதேச நிதியமைச்சின் செயலாளர் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். ஆனால் எந்தளவு தொகை நிதியுதவி வழங்கப் படவுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
வங்கதேசம் குறித்த இன்னொரு செய்தி : திங்கட்கிழமை தென்கிழக்கு பங்களாதேஷில் ரமடான் பண்டிகையை முன்னிட்டு ஒரு செல்வந்த வியாபாரி ஒருவரின் வீட்டுக்கு முன்பு கூடிய கிட்டத்தட்ட பத்தாயிரக் கணக்கான வறிய கிராமத்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பெண்கள் பலியாகி உள்ளதாகவும் 50 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tuesday, May 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment