Exoplanets எனப்படும் விண்வெளியில் பூமிக்கு ஒப்பான வாழ்வாதாரம் உள்ள கிரகங்களைக் கண்டு பிடிக்கவென அதி நவீன முறையில் தயாரிக்கப் பட்ட TESS என்ற செய்மதியை செவ்வாய் மாலை நாசா கேப் கனவரல் தளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் இன் ஃபால்கன் 9 ராக்கெட்டு மூலம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப் பட்டது.
ஆனால் ராக்கெட்டின் தொழிநுட்பக் கோளாறு காரணமாக இதன் ஏவுகை புதன்கிழமைக்கு ஒத்திப் போடப் பட்டுள்ளது.
கிட்டத்தட்ட வாஷிங் மெஷின் அளவில் சுமார் 2200 கோடி ரூபாய் செலவில் இந்த செய்மதி தயாரிக்கப் பட்டதாகும். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் குறைந்த பட்சம் செயற்படும் எனக் கருதப் படும் இந்த செய்மதி மூலம் சூரியனுக்கு அப்பால் பல ஒளியாண்டுகள் தொலைவில் மறைந்து கிடக்கும் இலட்சக் கணக்கான நட்சத்திரங்களையும் 20 000 கிரகங்களையும் கண்டு பிடிக்க முடியும். இதில் குறைந்த பட்சம் பூமியளவில் 50 கிரகங்கள் அடங்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.
Home
»
World News
»
பூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS விண்கலத்தின் ஏவுகை 48 மணித்தியாலம் தாமதம்
Tuesday, April 17, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment