“புதிய அரசியலமைப்புக்கான பணிகளை அரசாங்கம் மீளவும் ஆரம்பிக்காவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தன் விலகுவதே நல்லது.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய டுவிட்டர் கணக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள், தமிழ் மக்களின் பிரச்சினை சார்ந்தது அல்ல. ஆனால், தமிழ் மக்களின் முன்னுரிமைப் பட்டியலில், இனப்பிரச்சினையே முதலிடம் வகிக்கிறது.
புதிய அரசியலமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லையென்றால், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி, வெறுமனே ஒரு பக்க வாத்தியம் தான். அரசியலமைப்புப் பணிகள் ஆரம்பிக்காவிடின், இரா. சம்பந்தன் பதவி விலகுவது நல்லது.
இலங்கையின் தெற்குப் பகுதியை, "சிங்கள தேசம்" என வர்ணித்து, ஈழக் கோரிக்கையை, இரா. சம்பந்தன் கைவிட்டமையை, இலங்கையின் தெற்குப் பகுதி புரிந்து கொள்ளவில்லை என்பதோடு, அதை மதிக்கவுமில்லை.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
அரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டால், சம்பந்தன் பதவி விலகுவது நல்லது: மனோ கணேசன்
Wednesday, April 18, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment