பொழுதுபோக்குக்குதான் நடிக்க வருகிறார் ஜோதிகா.
அதற்காக கொடுக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு நடிப்பாரா என்றால், அதெப்படி நடக்கும்?
சூர்யா கம்பெனியை தவிர, வேறு கம்பெனி படங்கள் என்றால், கோடியை நெருங்குகிற அளவுக்கு சம்பளம் கேட்கிறாராம்.
விளம்பரப் படங்கள் என்றால், அது மேலும் சில கோடிகளை தொட்டுவிடுகிறதாம்.
வங்கி நிறைய பணம் இருந்தாலும், வாய் நிறைய ‘வேணும்’னு கேட்கிற குணமும் இருப்பதால், சற்றே முகத்தை தூக்குகிறது கோடம்பாக்கம்.
ஆனாலும் ஜோதிகாவுக்கு தினம் ஒருவராவது கதை சொல்ல நேரம் கேட்கிறார்கள்.
அவரும் மாதத்திற்கு ஒரு கதை கேட்டு வருகிறார். ஆக மொத்தம் இன்னும் ஐந்து வருஷத்துக்காகவாவது ஜோவின் கொடி கோடம்பாக்கத்தில் பறக்கும்.
Friday, April 27, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment