Thursday, April 19, 2018

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத் திருப்பவே, பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரான எச்.ராஜா அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் குடும்ப வாழ்க்கை பற்றி அவதூறு கருத்தொன்றை எச்.ராஜா, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டிருந்தார். அது பற்றி கேள்வி எழுப்பிய போதே, மு.க.ஸ்டாலின் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

ஸ்டாலின் கூறியதாவது, “தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க, சட்டமன்றத்தில் தொடர்ந்து திமுக வலியுறுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை திசைத்திருப்பவே, எச்.ராஜா அவதூறு கருத்துக்களை கூறிவருகிறார். மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் தொடர்ந்து செயல்படுகிறார், ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக தொடர்ந்து போராடும். நிர்மலா தேவி விவகாரத்தில், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை தேவை” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer