இந்திய அரசானது சுமார் $4.5 பில்லியன் டாலர் பெறுமதியான S-400 எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைப் பொறிமுறையை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கூடாது என மூத்த அமெரிக்க சட்ட வல்லுனர்களும் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். இதை மீறி அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தால் இரு நாட்டு உறவிலும் கடும் விரசல் ஏற்படும் எனவும் இவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அதிபர் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் ரஷ்யாவுடன் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடும் தேசங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் CAATSA என்ற சட்டம் 2017 இல் மும்மொழியப் பட்டு இவ்வருடம் ஜனவரி முதல் அமுலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தியா அமெரிக்காவுடன் பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய பங்காளியாக இருப்பதால் அதன் மீது இத்தடை உத்தர்வு பிறப்பிப்பது மோசமான் விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகின்றது.
இதன் காரணமாக இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகள் குறித்து அமெரிக்காவுடன் திறந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் எனவும் அமெரிக்க சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
Home
»
World News
»
ரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீது தடை விதிக்க முடியாது! : அமெரிக்க சட்ட வல்லுனர்கள்
Friday, April 27, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment