கியூபாவின் புதிய அதிபராக 57 வயதாகும் மிகுவேல் டயாஷ் கனேல் என்பவர் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவில் காஸ்ட்ரோக்களின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் தான் பொருளாதாரத்தை நவீனப் படுத்துவனே தவிர ஒரு போது முதலாளித்துவத்துக்கு நாட்டை இட்டுச் செல்ல மாட்டேன் என மிகுவேல் தெரிவித்துள்ளார்.
ஹவானாவில் வியாழக்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் மிகுவேல் பதவியேற்றுக் கொண்டார். அதன் பின் அவர் உரையாற்றுகையில் தமது தேசத்தில் மாற்றம் அவசியம் தேவை என்றும் முதலாளித்துவத்துக்கு இடம் கொடுக்காத வகையில் இணையப் பாவனையை மேம்படுத்துவதற்கும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை நவீனப் படுத்துவதற்கும் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். சுமார் 12 வருடங்களாகப் பதவி வகித்த 86 வயதாகும் ராவுல் காஸ்ட்ரோ தொடர்ந்தும் கம்யூனிசக் கட்சியின் முதல் செயலாளராக நீடிப்பார் என்று தெரிய வருகின்றது.
Thursday, April 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment