Wednesday, April 4, 2018

காவிரி விவகாரத்தில் போலியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி தமது இயலாமையை அ.தி.மு.க. அரசு மறைக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசின் எடுபிடிகளை போல தமிழக அரசு செயல்பட்டு வருகிறது, வழக்குகளை மட்டுமே தொடர்ந்துவிட்டு அ.தி.மு.க அரசால் கை கழுவி விட முடியாது, அ.தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம், சாக்குப்போக்குகளை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளி போட்டுள்ளது. இன்று நடைபெறும் மக்கள் நீதி மய்யம் பொதுகூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முக்கியமாக விவாதிக்கும், பிரச்சனைகளை மட்டும் பேசாது தீர்வுக்கான வழியேயும் முன்னிருத்தும், முக்கிய பிரச்சனைகளில் மய்யத்தின் கோட்பாடுகள் வகுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer