அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திராமல் உடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அடுத்த பொதுத் தேர்தல் வரை தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பது கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமையும் என சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். எனினும், அதுவரை காத்திருக்காது மக்களுக்காக தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும்.” என்றுள்ளார்.
Thursday, April 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment