தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்ததை அடுத்து, பல முன்னணி ஹீரோக்கள் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடிந்தால் எங்கு போவது என்கிற விழிப்புதான் இது.
படப்பிடிப்பு இல்லாமல் பரிதவித்துப் போயிருக்கும் இவர்களுக்கு ஒரு ஐடியா சொல்லியிருக்கிறார் ஆர்யா.
அந்த ஐடியா தயாரிப்பாளர் சங்கத்தை குளிர்வித்திருப்பதுதான் ஆஹா ஓஹோ.
‘சும்மாயிருக்கிற நேரத்தில் ஒரு ஸ்டார் நைட் நடத்தினா, செலவு போக ஐந்தாறு கோடி கிடைக்கும்.
அதை தயாரிப்பாளர் சங்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாமே?’
இதுதான் ஆர்யாவின் யோசனை.
அவர் வாட்ஸ் ஆப்பில் ஷேர் பண்ணிய நேரத்திலிருந்தே களை கட்டிவிட்டது சங்கம்.
விஷால் தலைமையில் விறுவிறுவென வேலை ஸ்டார்ட்!
எவனாவது நடுவுல பூந்து கடுகு பொரிக்காம இருக்கணுமே சாமீய்?
Wednesday, April 4, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment