“ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஈழத்தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு இருவார கால விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அங்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வு மேம்பட இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும் இன்னும் கூடுதல் உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பு இந்திய அரசுக்குள்ளது.” என்றுள்ளது.
Wednesday, April 18, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment