பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் தமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஏனைய சக தமிழ் அரசியல் கட்சிகளை பழிக்குப் பழிவாங்கும் நோக்கம் எம்மிடம் ஒருபோதும் இருக்கவில்லை. ஆனால் அண்மைய சில நாள்களாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளின் பிரகாரம் நாம் திட்டமிட்டு ஏனைய சக தமிழ் கட்சிகளை பழிக்குப்பழி வாங்குவதாக எம்மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், நாம் அவ்வாறு ஒருபோதும் செயற்பட்டதும் கிடையாது. செயற்படப் போவதும் கிடையாது. தீவகத்தை பொறுத்தவரையில் அந்த மக்களுக்கும் எமக்கும் நீண்டகால உறவு இருந்து வருகின்ற அதேவேளை, நாம் அந்த மக்களுக்காக இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியுள்ளோம்.
அதுமாத்திரமன்று, தீவகத்தில் நாம் நீண்டகாலமாக இந்த மக்களுக்கு சேவை செய்துள்ளோம். அதனடிப்படையில்தான் வேலணை பிரதேச சபையில் எமக்கான வெற்றியை உறுதிசெய்யும் வகையில் செயற்பட்டு அதன் வெற்றியை உறுதி செய்திருந்தோம்.
இதனிடையே, உள்ளூராட்சி சபை தேர்தல்களின் பின்னர் நாம் எந்தக் கட்சிகளின் ஆதரவையும் தேடியோ அல்லது நாடியோ செல்லவில்லை எந்தக் கட்சி பெரும்பான்மை ஆசனத்தை பெற்றிருக்கின்றதோ, அந்தக்கட்சிக்கு ஆதரவளிப்பதாகவே எமது கட்சி முடிவெடுத்திருந்தது.” என்றுள்ளார்.
Thursday, April 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment