பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரை விடுவிக்கக் கோரி, வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரனிடம் ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இன்று செவ்வாய்க்கிழமை மனுக் கையளித்தனர்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்திடம் மூன்று இலட்சம் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த கையொப்பப் படிவங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியே இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
Tuesday, April 17, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment