Tuesday, April 3, 2018

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு சினிமா பேஸ்கட்டு இருக்கிறதா தெரியாது. ஆனால், பலரையும் கஷ்டப்படுத்தியாவது அந்த ‘கட்டு’ உருவாகிவிடும் போலிருக்கிறது. மறைந்த மருத்துவ மாணவி அனிதாவாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு, இன்னொரு படத்தில் அம்மன் வேஷம்.

இந்த புதிய படத்தை மகேஷ் என்பவர் இயக்குகிறார். இயல்பிலேயே ஜுலியிடம் ஓவர் ஆக்டிங் மேனியா இருப்பதால், அம்மன் கெட்டப் போட்டு போட்டோ செஷன் செய்யும் போதே அங்கிருந்தவர்களுக்கு அருள் பாலிக்கிற அளவுக்கு நடித்து தள்ளினாராம். விருது உனக்குதான்மா என்று இப்பவே சாம்பிராணி போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer