பாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இலண்டனில் நேற்று புதன்கிழமை அங்கு வாழும் இந்தியர்களுடன் நடைபெற கலந்துரையாடல் நிகழ்வின் போது பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று இரவு இந்தியர்களுடனான நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ‘பாரத் கி பாத், சப்கே சாத்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 1700 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது சமூக ஊடங்கங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார். அப்போது பெரும்பாலான கேள்விகள் அண்மையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்த கேள்விகளாகவே இருந்தன.
அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளித்த மோடி, “யார் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் அது தேசத்திற்கு அவமானம் தான். இது போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்கள் அரசியல் ஆக்கப்படக்கூடாது. பெண்களை மதிப்பதற்கு தங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும். பெண் குழந்தைகளிடம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்கும் நாம், ஆண் குழந்தைகளிடம் கேள்விகளே கேட்பதில்லை.” என்றுள்ளார்.
Thursday, April 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment