நாட்டு மக்களினால் 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆணையை மதித்து நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரியுள்ளது.
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கூட்டமைப்புச் சார்பாக, அதன் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டனர்.
இதன்போது, 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை, இரண்டு தலைவர்களும் (ஜனாதிபதியும், பிரதமரும்) மதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை, கூட்டமைப்பு முன்வைத்ததாக கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Wednesday, April 4, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment