சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்ற சிறுவர்க்கான கல்வி உரிமை புரட்சியாளரான மலாலா யூசுஃப்சாய் 5 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாகக் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சனிக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார். சிறுமிகளின் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுத்ததற்காக 5 வருடங்களுக்கு முன்பு தலிபான்களால் தலையில் மலாலா சுடப் பட்டார்.
சிகிச்சைக்காக இலண்டன் சென்ற அவர் அங்கு குணமடைந்ததும் அங்கேயே தங்கிக் கல்வி கற்றுக் கொண்டு உலகளாவிய ரீதியில் சிறுவர் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் தான் 5 வருடம் கழித்து கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்புடன் 20 வயதாகும் மலாலா தனது பெற்றோர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் மர்ரியும் ஔரங்கசீப் ஆகியோருடன் அவரது வீடு அமைந்திருந்த மிங்கோராவுக்கு காலை நேரம் விஜயம் செய்திருந்தார்.
தொடர்ந்து 4 நாட்கள் பாகிஸ்தானில் செலவழிக்கத் திட்டமிட்டுள்ள மலாலா மிங்கோராவுக்கு அருகே குலி பாஹ் இலுள்ள இராணுவப் பள்ளியில் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்துப் பேசினார். இதன் பின் கருத்துத் தெரிவித்த அவர் தான் தாக்கப் பட்டு 5 வருடங்களில் இது தான் ஸ்வாட் வல்லே இற்கான தனது முதற் பயணம் என்றும் தான் மிகவும் சந்தோசமாக உணர்வதாகவும் கூறியதுடன் தன்னை வரவேற்ற கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர், நண்பர்களுக்குத் தனது நன்றியையும் பகிர்ந்து கொண்டார். மேலும் தனது தாய் நிலம் மற்றும் கலாச்சாரம் குறித்துப் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மிக இளவயதில் முதன் முறை நோபல் பரிசு ஒன்றை வென்ற பெருமை உடைய மலாலா யூசுஃப்சாய் தற்போது இலண்டனின் புகழ் மிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக மாணவி ஆவார். மேலும் இவர் தனது இலட்சியம் வருங்காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதே என்றும் கூறி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, April 1, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment