அண்மையில் சர்வதேசம் மற்றும் ஐ.நா இன் எதிர்ப்பை மீறி வடகொரியா அணுவாயுத சோதனை செய்து பெரும் அழுத்தத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளானது.
பொருளாதாரத் தடைகளும் அதிகரிக்கப் பட்டன. இதையடுத்து சற்றுப் பணிந்த வடகொரியா அண்மையில் தென்கொரியாவில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது.
மேலும் சமீபத்தில் தான் புகையிரதம் மூலம் சீனா வந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் சந்தித்திருந்தார். இதன் போது அமெரிக்க அதிபர் டிரம்பையும் நேரில் சந்தித்துப் பேசத் தான் ஆவலாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து வடகொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பு குறித்து ஆலோசிப்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்பிரல் 17 ஆம் திகதி ஜப்பான் பிரதமர் அபே இனை சந்திக்கின்றார். புளோரிடாவில் இச்சந்திப்பு நடைபெறும் என வெள்ளை மாளிகை உறுதிப் படுத்தியுள்ளது.
வடகொரியாவில் அமைதியையும் நிலைத் தன்மையையும் ஏற்பட நடவடிக்கை எடுக்கப் பட்டால் அமெரிக்காவுடன் பேசத் தயார் என முன்னதாக கிம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Monday, April 2, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment