பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை இரவு 09.30க்கு) இடம்பெற்றது.
இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 122 பேரும், ஆதரவாக 76 பேரும் வாக்களித்துள்ளார்கள். 26 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால், 46 வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
Home
»
Sri Lanka
»
ரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது!
Wednesday, April 4, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment