35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளது. அதாவது அங்கு வர்த்தக ரீதியிலான முதலாவது திரையரங்கம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 40 ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு விதிக்கப் பட்ட தடையும் முடிவுக்கு வந்துள்ளது. அண்மைக் காலமாக சவுதியில் பல திருப்பு முனைகளை நிகழ்த்தும் வண்ணம் அங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் முயற்சியால் தான் இதுவும் சாத்தியமாகி உள்ளது.
தலைநகர் ரியாத்தில் இருந்த பல்லிசை அரங்கு திரையரங்காக உருமாற்றம் செய்யப் பட்டுள்ளது. சுமார் 450 பேர் அமர்ந்து ரசிக்கக் கூடிய இத்திரையரங்கில் ஹாலிவுட் திரைப்படமான 'Black Panther' திரையிடப் படவுள்ளது. இந்த உத்தரவு காரணமாக சவுதியில் உள்ள பொது மக்கள் கடும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் இதனைக் கொண்டாடியும் வருகின்றனர். மேலும் சமூக ஊடகங்களில் பட்டத்து இளவரசருக்குப் பாராட்டும் குவிந்து வருகின்றது. இதனால் சவுதியில் திரையரங்குகளில் திரைப் படம் பார்க்கக் கூடாது என்ற பழமை வாதம் அடிபட்டுப் போயுள்ளது.
Home
»
Cinema News
»
35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது சவுதி : 'பிளேக் பேந்தர்' உடன் தொடக்கம்
Thursday, April 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment