கடந்த மாதம் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன இறக்குமதிப் பொருட்களுக்கான தீர்வை வரியை அதிகப் படுத்தி உலகளாவிய வர்த்தகப் போரைத் தொடங்கி வைத்தார்.
பதிலுக்குத் தற்போது சீனாவும் அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டாலர்கள் வரை தீர்வை விதித்து சுமையை ஏற்றியுள்ளது. இதனால் உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போர் தீவிரமடையத் தொடங்கி விட்டது.
முக்கியமாக அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி ஆகும் அலுமினியம், பழங்கள், பன்றி இறைச்சி போன்ற பொருட்கள் உட்பட சுமார் 128 அமெரிக்கப் பொருட்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்ட கட்டண சலுகைகள் மற்றும் கழிவுகளை சினா ரத்து செய்துள்ளது. இதில் 120 பொருட்களுக்கு கூடுதலாக 15% வீதத் தீர்வையும் எஞ்சிய 8 பொருட்கள் மீது 25% வீத தீர்வையும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சீனா. அண்மையில் சீனாவின் அலுமினியம் மற்றும் எஃகு பொருட்கள் இறக்குஅதி மீது அமெரிக்கா தீர்வையை அதிகரித்த காரணத்தினால் தான் பதிலுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக சீன அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களின் சொத்து உரிமையை சீனா சூறையாடுகின்றது என்ற குறைபாடு காரணமாக மார்ச் 23 ஆம் திகதி அதிபர் டிரம்ப் சீனப் பொருட்கள் மீது 60 மில்லியன் டாலர்கள் அளவு வரியை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டாலர் தீர்வை வரி விதித்த சீனா! : வர்த்தகப் போர் தீவிரம்
Monday, April 2, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment