மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றில் இருந்து பொலன்னறுவை சுங்காவில் பகுதியை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் பொலன்னறுவை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் புனானை பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆறு பேர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 12 பேர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையவர்கள், சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
குறித்த விபத்துக்குறித்து விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Tuesday, April 3, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment