வாழ்நாள் சாதனையாளரும், பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்தார். இலண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தததாக அவரது குடும்பத்தினர்அறிவித்துள்ளனர்.
76 வயதான அவரின் வாழ்வு மிகச் சவாலான சரித்திரம். 21 வயதில், அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் பாதிப்புற்ற இவரது கழுத்துக்குக் கீழான உறுப்புக்கள் அனைத்தும் செயலிழந்தன. அவர் இரு வருடங்கள் மட்டுமே வாழ முடியும் என மருத்து அறிக்கைகள் தெரிவித்த நிலையில், நம்பிக்கையேடும், விஞ்ஞானத்தின் துணையோடும், அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.
அவரது கண்ணசைவினையே தொடர்பாடல் மொழியாகக் கொண்டு, தன் அறிவியல் ஆய்வுகளை வெளிப்படுத்தினார். இந்த நூற்றாண்டின் அதி புத்திசாலிகளில் மிக முக்கியமானவர் ஹாக்கிங். சர்க்கர நாற்காலியில்இருந்தபடியே பல சாதனைகளை படைத்தவர்.
கருந்துளை (black holes) குறித்த ஆய்வுகளிலும், பிரபஞ்சத்தின் வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பிலும், இவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் ஆச்சரியமானவை. Time travel கால பயணம் குறித்து தெளிவான கருத்துக்கள் முன்வைத்தவர்.
தடைகளைத் தகர்த்த அந்த மாமனிதனின் வாழ்வு மனித சமூகத்துக்கு நம்பிக்கை தருவது. அவரது பணிகளும் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மதிநுட்பமும் ஹாஸ்ய உணர்வும் உலகில் மேலும் பலரை வாழ்விக்கின்றது.
Wednesday, March 14, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment