மும்பையில் நேற்று நடைபெற்ற பெண்கள் தின விழாவில் பேஷன் ஷோ நடைபெற்றது. இதில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முகம் மற்றும் உடல் முழுவதும் கருகி பார்ப்பதற்கு மோசமாக இருந்த போதிலும் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் மேடையில் நடந்து வந்தனர். இது பார்ப்பவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லக்ஷ்மி அகர்வால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஆசிட் வீச்சால் பெண்களின் வாழ்க்கை முடிவதில்லை. அது அவர்களுக்கு புதிய தொடக்கமாக அமையும். அவர்கள் தைரியத்துடன் போராட வேண்டும். சமுதாயம் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை ஏற்படுத்துக்கொடுக்கும். அதனை நாம் பயன்படுத்திக்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும், என கூறினார்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் ஆசிட் வீச்சு குறித்து மக்களிடையே விழுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும், ஆசிட்டை சட்ட விரோதமாக விற்பனை செய்வதை தடுப்பதற்காக போராட்டம் நடத்தி வருகிறார். இதனை வலியுறுத்தி பல பெண்கள் இந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டனர்.
Thursday, March 8, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment