Friday, March 9, 2018

அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்துப் பேசத் தனது விருப்பத்தை வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தெரிவித்திருந்தார். இந்த அழைப்பை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுவரை எங்கே எப்போது இந்த சந்திப்பு இடம்பெறும் என்பது தீர்மானிக்கப் படாத நிலையில் மே மாதத் தொடக்கத்தில் இது இடம்பெறும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது. அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கும் காலத்திலேயே வடகொரிய அதிபர் ஒருவரை முதன் முதல் சந்திக்கவுள்ள அதிபராக இச்சந்திப்பின் மூலம் டிரம்ப் பெயர் பெறவுள்ளார்.

இது குறித்து பிபிசி இற்கு அமெரிக்க கொரிய நிறுவன ஆய்வாளர் மைக்கேல் மேடன் தெரிவித்த கருத்தில் முன்பு சீனத் தலைவர் மாவோ இனை அமெரிக்க அதிபர் நிக்சன் சந்தித்ததற்கு இணையானது இச்சந்திப்பு என்றுள்ளார். இராணுவ ஆதிக்கம் அற்ற இரு கொரிய எல்லைப் பகுதியான பன்முன்ஜோமில் இச்சந்திப்பு நிகழலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. இச்சந்திப்பின் போது அணுவாயுதங்களைக் கைவிடுமாறு வடகொரியாவுக்கு அழுத்தம் அழிக்கப் படலாம் எனவும் ஆனால் அதை நிச்சயம் வடகொரியா ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறப்படுகின்றது.

மேலும் ப்யாங்க் கொங்கில் சிக்கியிருக்கும் அமெரிக்கர்களை விடுவிக்கும் நடவடிக்கையும் இப்பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப் படவுள்ளது. கிம் இன் நிபந்தனையாக வடகொரியாவை அணுவாயுத தேசமாக அங்கீகரிப்பதும் தென் கொரியாவில் முகாமிடுள்ள அமெரிக்கத் துருப்புக்களை வெளியேற்ற வேண்டும் என்பதும் அமையலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer