Friday, March 16, 2018

பா.ஜ.க., தமிழகத்தில் அரங்கேற்றிய நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஜன சேனா கட்சியின் 4ஆம் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண், ‘‘ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, ஊழலில் முதல் மாநிலமாக ஆந்திரா மாறியுள்ளது. முதல்வர் சந்திராபாபு நாயுடுவும், அவரது மகன் லோகேசும் மிகப் பெரிய அளவில் ஊழலில் ஈடுபடுகின்றனர். சேகர் ரெட்டியுடன் முதல்வரின் மகன் லோகேஷூக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.” என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் காணொளி மூலம் நேற்று காலை உரையாற்றியபோது முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

“எனக்கும், என் மகனுக்கு எதிராகவும் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது; அர்த்தமற்றது. தெலுங்கு தேசம் கட்சியை பலவீனப்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதிதான் இது. இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் நடத்துவது போன்ற நாடகத்தை ஆந்திராவில் நடத்த முடியாது. சில பெரும்புள்ளிகள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து நேற்று வரை நாடகம் நடத்தினர். தற்போது ஜன சேனாவுடன் சேர்ந்து நாடகம் நடத்தப்படுகிறது. நமது கவனம் எல்லாம் ஆந்திராவின் நலனில் இருக்க வேண்டும். கட்சி தலைவர்கள் யாரும் ஆவேசம் அடையக் கூடாது. ஜன சேனா தலைவர் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer