நடிகர் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் விஜய் சேதுபதி, ஜோதிகா, அரவிந்தசாமி, அருண்விஜய், ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் படபிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நடக்கும் ஸ்ட்ரைக் காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வில் இருக்கும் சிம்பு இந்த நேரத்தில் ஓவியா நடிப்பில் உருவாக இருக்கும் 99 எம்.எல். படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், சிம்பு அடுத்ததாக ரெக்க பட புகழ் ரத்தினசிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, March 27, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment