பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான டி.பி.ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தவறுகள் செய்யும் போது, அவற்றை வெளிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணி (மஹிந்த அணி) எதிர்வரும் வாரம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளது. அந்தப் பிரேரணையைிலேயே டி.பி.ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார்.
Monday, March 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment