அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரகடனப் படுத்திய புதிய வர்த்தகக் கொள்கைகளுடனான முரண்பாட்டால் டிரம்பின் முக்கிய பொருளியல் ஆலோகரான கேரி கோஹ்ன் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி உள்ளார். அதிபர் டிரம்புடன் முரண்பட்டு பிரியும் சமீபத்திய மிக முக்கிய உயர் மட்ட அதிகாரி இவர் ஆவார்.
கேரி கோஹ்னின் பதவி விலகலின் முதல் எதிரொலியாக புதன்கிழமை சர்வதேச பங்கு சந்தையில் அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. இதற்குஅதிபர் டிரம்ப் இன்னமும் சுயபாதுகாப்பு அடிப்படையில் மேலும் இறுக்கமான வர்த்தகக் கொள்கைகளை அறிமுகப் படுத்தக் கூடும் என்ற முதலீட்டாளர்களின் அச்சம் காரணமாக இருக்கலாம் எனப்படுகின்றது. மேலும் சர்வதேச சந்தையில் சீனாவின் பொருட்களுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உலோக மற்றும் அலுமினிய இறக்குமதி தீர்வை வரியை அதிகரிக்கும் திட்டத்தை எதிர்த்ததன் பின்னர் தான் கேரி கோஹ்ன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் அதிரடி பொருளாதாரக் கொள்கைப் பிரகடனங்கள் மற்றும் கேரி கோஹ்ன் இனது பதவி விலகல் காரணமாக மிக முக்கிய தொழில்துறை நிறுவனங்களான கேட்டர்பில்லார் மற்றும் போயிங் போன்றவை அதிகப் படியான நட்டத்தைச் சந்தித்துள்ளன. மேலும் இவை சர்வதேச சந்தையில் இவை போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதுதவிர அமெரிக்க டாலரின் பெறுமதியும் சிறிதளவு குறைவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
டிரம்பின் முக்கிய பொருளியல் ஆலோசகர் இராஜினாமா! : சர்வதேச பங்குச் சந்தையில் அமெரிக்கா வீழ்ச்சி
Sunday, March 11, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment