சக்க போடு போடு ராஜா படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் தற்போது ‘சர்வர் சுந்தரம்’ 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி', தில்லுக்கு துட்டு-2 ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘சர்வர் சுந்தரம்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் சந்தானம் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது சில காரணங்களால் அந்நிறுவனம் இப்பட தயாரிப்பிலிருந்து பின்வாங்கியதால், பிரபுதேவா ஸ்டூடியோஸ் மூலம் நடிகர் பிரபுதேவா இப்படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு வருகிற மே அல்லது ஜூன் மாதம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
Monday, March 12, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment