Monday, March 26, 2018

ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்க்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய ராணுவம் தனது பலத்தை காட்ட பெரும் பயிற்ச்சி முகாம் ஒன்றை இன்று நடத்தியுள்ளது. இன்று மதியம் ரஷ்ய நேரப்படி நடைபெற்ற இந்த ராணுவ பயிற்ச்சியில் இதுவரை காண்பிக்காத பல ராங்கிகளை ரஷ்ய ராணுவம் காண்பித்துள்ளது. தரையில் இருந்து வானை நோக்கி, தரையில் இருந்து கடலை நோக்கி மற்றும் தரையில் இருந்து தரையை நோக்கி ஏவப்படும் அதி நவீன ஏவுகணைகளை காட்டியுள்ளது ரஷ்யா..

குறித்த ஏவுகணை விமானத்தை தாக்க வல்லதோடு, போர் கப்பல்களை அழிக்கவும். தமது இலக்கை நோக்கி வரும் எதிரி ஏவுகணையை தாக்கி அழிக்கவும் வல்லது. இதுபோக ரஷ்யாவின் பெரும் படைகள், ராங்கி படைகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகள் பக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஷ்யாவிடம் தற்போது 3.3 மில்லியன் படைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோக சுமார் 350 க்கும் மேற்பட்ட போர் கப்பல்களும் 1000த்திற்கும் மேற்பட்ட அதி நவீன தாக்குதல் விமானங்களும் உண்டு.

இதனை பயன்படுத்தினால் சுமார் 48 மணி நேரங்களில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை ரஷ்யா கைப்பற்றி விடும். அடுத்து அது இலகுவாக பிரிட்டனையும் தாக்க முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. தற்போது உலக நாடுகளை மிகவும் அச்சுறுத்தும் ஒரு நாடாக ரஷ்யா மாறியுள்ளது என்பதே உண்மை நிலை ஆகும். athirvu.com


0 comments :

Post a Comment

 
Toggle Footer