Friday, March 16, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் முல்லைத்தீவுப் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டு, சில மணி நேரங்களில் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் சிவாஜிலிங்கத்துக்கு ஏற்கனவே முன்பிணை வழங்கியிருந்த காரணத்தினாலேயே பொலிஸார் அவரை விடுவித்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அதன்போது, அரச சொத்துக்களை சேதமாக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சிவாஜிலிங்கத்துக்கு எதிராக முல்லைத்தீவுப் பொலிஸார் பதிவு செய்திருந்தனர்.

கடந்த 27ஆம் திகதி அது தொடர்பிலான விசாரணைக்கு வருமாறு சிவாஜிலிங்கத்துக்கு பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர் ஆஜராகியிருக்கவில்லை. அன்றைய தினம் வடக்கு மாகாண சபை அமர்வுகள் இடம்பெற்றதால் அவர் விசாரணைகளில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் முன்பிணை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer