“இறுதி மோதல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அதனால் பேசவில்லை” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“யுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னர், புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுவார்த்தைகள் ஏதாவது இடம்பெற்றதா? புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா? என்று இந்திய ஊடகமொன்றுக்கு எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பதில் வருமாறு, “தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல். அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை ஒரு புத்திசாலி என நான் குறிப்பிடப்போவதில்லை.
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அவ்வாறில்லை. வெளிநாட்டில் அவரை கொழும்புக்கு கொண்டுவந்த போது அச்சத்துடன் காணப்பட்டார். அவர் அது தான் தமது கடைசித் தருணம் என்று நினைத்திருந்தார். எனினும், தற்போது அவர், மகிழ்ச்சியாக இருக்கின்றார் ஏனென்றால், அவருடைய கடந்தகாலம் மற்றும் தவறுகளை புரிந்து கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம், அவரை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ நாம் அனுமதித்தோம்" என்றுள்ளார்.
Sunday, March 25, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment