தமிழில் ஒரு அனிமேஷன் படம் உருவாகிறது என்றாலே, நமக்கு நாமே வேப்பிலை அடித்துக் கொள்கிற அளவுக்கு பீதியாக வேண்டியிருக்கிறது.
‘கோச்சடையான் படத்தில் வந்த ரஜினியின் அழகே(?) அதற்கு உதாரணம்.
நிஜ நிலவரம் இப்படியிருக்க... ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்றொரு படத்தை உருவாக்கப் போகிறார்கள்.
அதுவும் படத்தை ஒரே வருடத்தில் முடிக்க திட்டமாம்.
பொதுவாகவே கிராபிக்ஸ் வேலைகள் நினைத்த நேரத்தில் முடியாது.
கோச்சடையானே மூன்று வருட தயாரிப்பு.
படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஜோடியாக நடிக்கப் போகிறார்கள்.
‘இருவரும் உயிரோடு இருந்திருந்தால் ஒரு பெரிய சம்பளம் தந்திருக்க வேண்டுமல்லவா,
அந்த சம்பளத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாமே?’ என்றொரு கேள்வியை இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் கேட்டபோது, நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்கு கொடுப்பேன் என்றார்.
முழத்தை பற்றிக் கேட்டால் பழத்தை பற்றி பதில் சொல்வதென்பது இதுதானோ?
Wednesday, March 7, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment