பல இனத்தவர் வாழும் ஒரு நாட்டில் அடுத்த இனத்தவர், நம்மை பற்றி எத்தகைய அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என, அமைச்சர் மனோ. கணேசன் அவர்கள், தன் சமூகவலைத்தளக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஒரு இனத்தைப்பற்றி, அடுத்த இனம் என்ன எண்ணுகிறது என்பதும், அது கலந்துரையாடப்பட வேண்டும் என்பதும் என் கொள்கை. ஒரு பல்லின நாட்டில் இது கட்டாயம் என நான் மிகத்திடமாக நம்புகிறேன்.
இந்நாட்டில் இனவாத குழுக்கள் அவர்களது இனங்களுக்குள் ஒளிந்துள்ளார்கள். ஆனால் நான் எந்த இனவாதத்திற்கும் எதிரானவன். இந்நாட்டில் சகவாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலை விடுக்கும் பெரும்பான்மை இன அடிப்படைவாதிகளை எதிர்க்க துணிவில்லாதோர் என்னை கீழ்த்தரமாக விமர்சிப்பதில் இன்பமடைகிறார்கள்.
Tuesday, March 13, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment