ஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் 4 ஆவது முறையாகப் பதவியேற்றுள்ளார். முன்னதாக நிகழ்ந்த தேர்தலின் பின் 6 மாதங்களுக்கு நீடித்த அரசியல் குழப்பமும் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மையை விட 9 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பிரதமராகத் தேர்வாகியுள்ளார் இவர்.
அதாவது நாடாளுமன்றத்தில் மேர்கெல்லுக்கு ஆதரவாக 364 உறுப்பினர்களும் எதிர்த்து 315 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். இந்த ரகசிய வாக்கெடுப்பில் ஏஞ்சலா மேர்கெலின் கட்சியைச் சேர்ந்த 35 எம்.பிக்களுமே அவருக்கு எதிராக வாக்களித்திருக்கலாம் என ஊகிக்கப் படுவதால் மேர்கெல்லுக்கு இம்முறை ஆட்சி கடினமாக இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பாவின் சக்தி வாய்ந்த பொருளாதார வல்லரசான ஜேர்மனிக்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இலட்சக் கணக்கான மக்களுக்கு அடைக்கலம் அளிப்பது குறித்து கடந்த ஆண்டு கடும் எதிர்ப்பு ஜேர்மனியில் கிளம்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத விதமாகப் பின்னடவைச் சந்தித்திருந்த மேர்கெல் ஆளும் கட்சியின் பெரும்பான்மைப் பலத்தை அதிகரிக்க 2 ஆவது பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்து 4 ஆவது முறை பிரதமராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நேபாள அதிபராக வித்யா தேவி பண்டாரி மீண்டும் தேர்வாகி உள்ளார். முன்னதாக 2015 இல் நேபாளத்தின் முதல் பெண் அதிபராகத் தேர்வாகி இருந்த இவரது பதவிக் காலம் முடியவுள்ள நிலையில் தான் அவர் மறுபடியும் அதிபர் பதவிக்குத் தேர்வாகி உள்ளார்.
Home
»
World News
»
ஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அதிபராக வித்யா தேவி ஆகியோர் தேர்வு
Thursday, March 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment