நிகழ்கால உலகில் மனித அவலம் உச்சக்கட்டத்தில் இடம்பெற்று வரும் சிரியாவில் நாளுக்கு நாள் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டு வருகின்றனர். முக்கியமாக அண்மைக் காலத்தில் கிழக்கு கௌட்டாவில் சிரிய அரசும் ரஷ்யாவும் இணைந்து வான் வழியாகவும் தரை வழியாகவும் மேற்கொண்டு வரும் தாக்குதலில் கொத்துக் கொத்தாக மனிதர்கள் கொல்லப் பட்டும் பலர் காயம் அடைந்தும் வருகின்றனர்.
கிழக்கு கௌட்டாவில் இருந்து வெளியேறும் மார்க்கம் இன்றி தூக்காமில்லாது அங்கு காயம் அடைந்து வரும் எண்ணற்ற மக்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் டாக்டர்களும் கூட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தெற்கு சிரியாவின் ஆப்ரின் நகரத்தில் இருந்து 30 000 பேரும் கிழக்கு கௌட்டாவில் இருந்து 20 000 பேருமென மொத்தம் 50 000 பொது மக்கள் வெளியேறியுள்ளனர்.
சுமார் 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை 61 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன் இதில் 56 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். இந்நிலையில் தான் கிழக்கு கௌட்டாவில் மனரீதியாகப் பாதிக்கப் பட்டுள்ள டாக்டர்கள் மனித நேயத்துடன் சில மணி நேரத் தூக்கத்துடன் ஓய்வில்லாது பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும் முறையான உணவு கிடைப்பதில்லை என்பதுடன் குண்டு வீச்சு காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய நிலையிலும் இந்த டாக்டர்கள் தொண்டாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
சிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்றும் டாக்டர்களுக்கு உளவியல் பாதிப்பு
Sunday, March 18, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment