கிழக்கு ஐரோப்பாவின் ரஷ்யா, பல்கேரியா, உக்ரைன், ரொமானியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளில் இம்முறை ஆரஞ்சு நிறத்தில் பனி படர்ந்து வண்ண மயமாகக் காணப் படுகின்றது. பலர் இப்பனிப் படலங்களைப் படம் பிடித்து சமூக வலைத் தளங்கள் மூலமாக இணையத்தில் வேகமாகப் பரப்பி வருகின்றனர்.
கிழக்கு ஐரோப்பாவுக்கு அருகே ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய பாலை வனமான சஹாரா பாலை வனத்தில் இருந்து வீசும் மண்புயலுடன் மழை மற்றும் மேகங்கள் கலந்து பனிப் பொழிவையும் சிவப்பு நிறமாக மாற்றி விடுகின்றன என்று இதற்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. பொதுவாக 5 வருடங்களுக்கு ஒரு முறை அரிதாக ஏற்படும் இந்நிகழ்வு இம்முறை அதிக மண் கலந்துள்ளதால் பல இடங்களில் இவ்வாறு தென்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்வைப் படம் பிடித்த நாசாவின் செயற்கைக் கோளிலும் இது போன்று அதிகமான மண் தூசிகள் கலந்திருப்பது அவதானிக்கப் பட்டுள்ளது.
Wednesday, March 28, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment