சாவகச்சேரி நகர சபைக்கான தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். பிரதித் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட யோகேஸ்வரன் ஜெயக்குமார் 6 வாக்குகள் பெற்றுக் கொண்டார். வாக்குகளின், அடிப்படையில் சாவகச்சேரி் நகர சபையும் கூட்டமைப்பு வசமானது. அதே வேளை யாழ்.மாநகர சபையும் கூட்டமைப்பு வசமானது குறிப்பிடத்தக்கது. நாளை பருத்தித்துறை நகர சபை தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
Monday, March 26, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment