அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுரகத்தின் முக்கிஸ்தர்களுடனும், வாஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கியஸ்தர்களுடனும் முக்கியமான பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடவுள்ளார்.
இலங்கை தொடர்பில், 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தினை அமெரிக்கா வழங்க வேண்டும் என்கிற விடயத்தை வலியுறுத்துவதற்காகவே எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா சென்றுள்ளார்.
Monday, March 19, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment